சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது

(UTV|COLOMBO) பேருவளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திசெல்லும் நோக்குடன் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு கொம்பனி தெரு பகுதியிலிருந்து பேருவளைக்கு வருகை தந்துள்ளதுடன், சட்டவிரோத போதை பொருள் விற்பனைக்காகவே அவர் பேருவளையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து குடு என அழைக்கப்படும் போதை பொருள் 3 கிராம், 5 கிராம் அய்ஸ், ஹஷீஷ் 15 கிராம் மற்றும் டிஜிட்டல் தராசு ஆகியவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி

இலங்கையின் அரசியல் மாற்றம்-ஜப்பான் வரவேற்பு