உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

STF சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் ஆண் மாறுவேடத்தில்

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ரூ.100,000 அபராதம்