வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுகேகொட, கல்கிசை, கம்பஹா, களனி, பாணந்துறை முதலான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் பொலிஸாரும் இராணுவத்தினரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வார்கள்.

Related posts

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்க நேரிடும் – ஐ.நா.பொதுச் செயலாளர் எச்சரிக்கை

நச்சுப்பொருள் தாக்குதலில் இருவர் கவலைக்கிடம்