உள்நாடு

சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்குமாறு அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

மேலும், வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள மற்றும் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோதமாக பதாகைகளும் இன்று அகற்றப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பதாகைகள், மற்றும் சுவரொட்டிகள் காணப்படுமாயின், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது