உள்நாடு

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சிறைச்சாலைக்கு

(UTV | கொழும்பு) – சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இன்று(19) கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உடனான கலந்துரையாடலுடன் சட்டமா அதிபர் இணைந்து கொண்டதாக சட்ட மா அதிபரின் இணைப்பாளர் , அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.

இதன்போது சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர், சிறைச்சாலை கட்டமைப்பிற்குள் நேர்மையான அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சிறைச்சாலை ஊடான நம்பிக்கையினை இழக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!