சூடான செய்திகள் 1

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV|COLOMBO)  சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கான எழுத்துமூல கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது நாட்டில் நிலவுகின்ற பிரச்சினை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதற்காக ஜனாதிபதியிடம் எழுத்துமூல கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது

நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை…

எல்ல காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் அழிவு