சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாச – முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சி தலைவர்கள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு கொழும்பில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர் கபீர் ஹாசிம் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், முன்னாள் அமைச்சர் பௌசி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ,அமைச்சர் ரவூப் ஹகீம் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், முஸ்லிம் வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பல இடங்களில் சிறுபான்மை என்ற வார்த்தையை பாவிக்கின்றனர். ஆனால் நான் சிறுபான்மை என்ற சொல்லை பயன்படுத்தமாட்டேன். சக இனத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் இன்று

ரஞ்சித் சொய்சா எம்.பி க்கு விளக்கமறியல்

உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 உயர்வு