சூடான செய்திகள் 1

சஜித், கோத்தா இணைய மோதல்

(UTVNEWS|COLOMBO) – கோத்தபாய ராஜபக்ஸவையும், சஜித்பிரேமதாஸவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள்.

சஜித் பிரேமதாஸவின் பெயரில் உள்ள, www.sajithpremadasa.com என்ற இணையத்தளத்துக்குள் நுழைவோர், கோத்தபாய ராஜபக்ஸவின் பெயரில் உள்ள, www.gota.lk என்ற இணையத்தளத்துக்கு தானாகவே கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அதுபோல, கோத்தபாய ராஜபக்ஸவுக்காக பரப்புரைகள் செய்யப்படும், gotabayarajapakse.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.prisons.gov.lk இற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இணையத்தள முடக்கிகளின் இந்த சதி வேலை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், www.sajithpremadasa.com என்ற இணையத்தளம் தங்களால் இயக்கப்படவில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரியும் மீண்டும் விளக்கமறியலில்