உள்நாடுசூடான செய்திகள் 1

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது

(UTV|கொழும்பு)- சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள் என்ற தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பரிசீலித்துள்ளார்.

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள் என்ற தொனிப்பொருளில் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகிறது.

இந்த முயற்சியில் எட்டப்படும் தீர்மானங்கள் நாட்டின் மீதும், எதிர்கால சந்ததி மீதும் தாக்கம் செலுத்துவதால், சகலரும் இணங்கக்கூடிய கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொள்கை பற்றிய இறுதி அறிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்னதாக அதனை குறைந்தபட்சம் இரு மாதங்களுக்கு சமூகக் கருத்தாடலுக்கு உட்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஒன்லைன் கல்வி முறைமையை கூடுதலாக பிரபலப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்.

Related posts

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

எரிபொருள் கிடைக்காவிடின் மாலை 4 மணிக்கு பின்னர் மின் துண்டிப்பு