உள்நாடு

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம்

(UTV | கொழும்பு) – பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயமாக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மூன்று மாதங்களில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் இந்த கருவியை பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து கட்டண அளவீட்டு கருவி இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

   

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

இலங்கைக்கான காலக்கெடு முடிவு : சர்வதேச நாடுகள் தலையீடு அவசியம்

சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்