உள்நாடு

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு

(UTV | கொழும்பு) – சகல அரச ஊழியர்களையும் இன்று (03) முதல் வழமை போன்று சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபத்தை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக நிர்வாகப் பிரதானிகளின் அங்கீகாரத்திற்கு அமைவாக இதுவரை அரச சேவையாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தேவையின் அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்காக நிர்வாகப் பிரதானிக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறை புத்தாண்டு தொடக்கம் இரத்து செய்யப்படுவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் வழமையான முறையில் பணி இடம்பெறுவதனால் சகல திணைக்களங்களிலும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும் என்றும் நாட்டின் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அரசசேவையும் புத்தாண்டில் இருந்து வழமைப்போன்று இடம்பெற வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை

editor

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து