கேளிக்கை

‘கோலமாவு கோகிலா’ இந்தியில்

(UTV | இந்தியா) – நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் இந்தி மொழியில் உருவாக உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் கோலமாவு கோகிலா. அந்த படம் ஆங்கிலத்தில் வெளியான பிரேக்கிங் பேட் எனும் வெப் சீரிஸை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த திரைப்படம் நயன்தாராவின் மார்க்கெட் வேல்யுவை உயர்த்தியது.

இந்நிலையில் அந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். நயன்தாரா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். பஞ்சாப்பில் நடப்பது போல கதையமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளதாம்.

Related posts

யோகிபாபுவுடன் இணையும் ஜனனி ஐயர்

டிரம்ப்பையும் விட்டு வைக்காத சிவா

அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா, அதுவும் இந்தியாவில் இத்தனை கோடி வசூலா!