உள்நாடு

கோபா குழு பல அரசு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது!

அடுத்த வாரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு பல அரசு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோபா குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும், 19ம் திகதி தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின்  அதிகாரிகள் எதிர்வரும் 20ம் திகதி கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அரச நிறுவனங்களின் நிர்வாகத் திறன் மற்றும் நிதி ஒழுக்கம் குறித்து இதன்போது ஆராயப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

உள்ளூராட்சி சபை தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு.

editor

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு