உள்நாடு

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தன. இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டங்கள்

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

ரிஷாட் பதியுதீனுடன் இணையும் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி! வெள்ளிக்கிழமை பிரமாண்ட நிகழ்வு