சூடான செய்திகள் 1

கோட்டாபயவிற்கு வெளிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

மேற்படி குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

அதன்போது கோட்டாபய ராஜபக்ஷ வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை 24ம் திகதி வரை அவர் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !