உள்நாடு

கோட்டாபய – மைத்திரிபால இடையே சந்திப்பு

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணிநேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தம்

தேசிய அரசாங்கம் அமைக்க முஸ்தீபு : சம்பிக்க பிரதமரா?

ரஞ்சனுக்கு இன்று அல்லது நாளை விடுதலை