சூடான செய்திகள் 1

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பல மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு தற்காலிக பூட்டு