உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் எவரும் ஈடுபடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்றைய (4) தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அறிக்கையில்,‘எமது நாடு என்றுமே முகங்கொடுக்காத கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மக்களுக்கு அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், வியாபாரிகள், தனவந்தர்கள், சமூக சேவகர்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

எனினும், சில அரசியல்வாதிகள் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபத்தை தேட முயற்சிக்கின்றனர்.

முழு சமுதாயமும் கொவிட்19 தொற்றுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 61 பேர் பூரண குணம்

சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்