உள்நாடு

கொவிட் தொற்றாளர்களுக்கான டொஸி மாத்திரைகள் சனியன்று நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ள, கொரோனா தொற்றுறுதியானவர்களுக்கு வழங்கப்படும் டொஸி எனப்படும் மாத்திரைகள் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, டொஸி எனப்படும் குறித்த மாத்திரைகள் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு எதிர்வரும் சனிக்கிழமை கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொஸி மாத்திரையை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்திய உயர்ஸ்தானிகரிடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.

Related posts

பிரியமாலியுடன் பணியாற்றிய 3 பிரபல நடிகைகள் CID இற்கு

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்!