உலகம்சூடான செய்திகள் 1

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV|சீனா)- கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1868 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 1789 பேர் உயிழந்துள்ளனர்.

அதேநேரம் குறித்த தொற்றால் அங்கு 1807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை 59 ஆயிரத்து 989 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் 19 தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 862 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று

ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் – ட்ரம்ப் எச்சரிக்கை