உள்நாடு

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTV | கொவிட் – 19) – கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 891 மில்லியனாக அதிகரித்துள்ளது.

செலான் வங்கி 2.5 மில்லியன் ரூபாவையும், லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 05 மில்லியன் ரூபாவையும், திரு. கே.டீ.யு. குணரத்ன ஒரு மில்லியன் ரூபாவையும் மற்றும் திரு. ஏ.பி.பீ சேனகம இரண்டு லட்சம் ரூபாவையும் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்ட அன்பளிப்புகளை பிரதமர் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களிடம் கையளித்தார்.

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நிவ் சவுத் வேல்ஸில் உள்ள பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் நேரடியாக வைப்புச் செய்துள்ள 1.5 மில்லியன் ரூபாவையும் சேர்த்து கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 891 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Related posts

இஸ்ரேல் இலங்கைக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து!

IMF வரி சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்ற வேண்டும் – சஜித்

editor

ஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம்