உலகம்

கொவிட் 19 : 6 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை

(UTV | ஜெனீவா) – உலக கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குவதால் உலக நாடுகளிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார மையத்தின் தகவலின்படி உலக அளவில் இதுவரை 581,221 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 77,849,326 ஆக அதிகரிப்பு எனவும் உலகம் முழுக்க 13,459,235 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3,545,077 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 65,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 139,143 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,931,204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 43,245 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் இதுவரை 74,262 பேர் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 29,842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 937,487 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 24,315 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இலங்கை பயணிகளுக்கு இத்தாலி தடை

ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி

மியன்மாரில் நிலநடுக்கம்!