அரசியல்உள்நாடு

கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்ய வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம் – சஜித் பிரேமதாச

கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையில் வாழும் அனைவரினதும் எதிர்பார்ப்பு அபிவிருத்தியடைந்த நகரமொன்றை உருவாக்குவதேயாகும்.

இதன் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்திய கலாநிதி ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம்.

தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், திறமையானவரும், தைரியம் வாய்ந்தவரும் என சகல குணங்களும் நிறைந்த முற்போக்கு ஆளுமையாக திகழ்ந்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு மருத்துவராக, இலவச சுகாதாரத் துறைக்கு நிபுணராக தொழில்முறை முன்னேற்றத்திற்காக சேவையாற்றியதைப் போலவே, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் இலட்சக்கணக்கான நோயாளர்களு அவர் சிகிச்சையளித்துள்ளார்.

அவர் தற்போது களனி மற்றும் கொழும்பு மருத்துவ பீடங்களில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்காக கற்பித்து வருகிறார். மேலும் அவர் குடும்ப நல சுகாதாரம் தொடர்பான பரப்பில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் குடும்ப நல சுகாதார கற்கையை ஆரம்பித்த ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும், வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கும், வருமான மூலங்களை உருவாக்கும், முன்னேற்றகர அபிவிருத்தியுடன் ஜொலிக்கும் வளமான கொழும்பு நகரத்தை உருவாக்கும் பொருட்டு, உண்மையில் ஊழல், மோசடி, திருட்டு இல்லாத, ஒரு புதிய முகத்துடன், ஒரு புதிய தலைமையின் கீழ், ஒரு புதிய பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி சிறந்ததொரு புத்திஜீவியையும், திறமையான நிர்வாகியையும் முன்னிறுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் தொடர்ந்தும் கனமழை

பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது – முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

editor