உள்நாடு

கொழும்பு மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தையை மொத்த விற்பனையாளர்களுக்காக எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு மெனிங் சந்தையை கிருமி நீக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுகிழமையை தவிர ஏனைய நாட்களில் தினமும் அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு மெனிங் சந்தையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெனிங் சந்தைக்கு வருகை தருபவர்கள் கொரோனா தொடர்பில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்

நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

மேலும் 708 பேர் குணமடைந்தனர்