சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO) டெங்கு நோய்த் தொற்று வருடாந்தம் இந்தக் காலப்பகுதியில் அதிக அளவில் ஏற்படுவதன் காரணமாக பொதுமக்கள் அது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மேலும் இந்தக் காலப்பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையானது, டெங்கு தொற்று அதிகளவில் பரவுவதற்கு காரணமாக அமைவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 975 டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் 3950 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேநேரம் இந்த மாதத்தில் 25 நாட்களுக்குள் 2075 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது