உள்நாடு

கொழும்பு பேர வாவியில் உயிரிழக்கும் பறவைகள்

கொழும்பு, பேர வாவியில் பறவைகள் உயிரிழக்கின்றமை தொடர்பில் நீர் மாதிரிகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷியாமலி வீரசேகர தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை பயன்படுத்திய இரசாயனம் காரணமாக இந்த விலங்குகள் இறந்ததாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்த முடியாது என கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் தெரிவித்தார்.

உயிரிழந்த 25 விலங்குகளில், 7 விலங்குகளின் உடல்கள் இப்போது ஹோமாகம கால்நடை புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், இது பறவைக் காய்ச்சல் அல்ல என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

editor

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்