உள்நாடு

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை

(UTV | கொழும்பு) –

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதியின் பகுதி இன்று காலை சீரமைக்கப்படவுள்ளது. நேற்று பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொடை பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றிரவு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனவே ,இன்று காலை குறித்த இந்த பணிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், பத்கொடையில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளின் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!