சூடான செய்திகள் 1

கொழும்பு, கம்பஹா, குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம்

(UTV|COLOMBO)-கொழும்பு, கம்பஹா மற்றும் குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,534 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2,000 இற்கும் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’