வகைப்படுத்தப்படாத

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகள் 2019ல் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் 2019 டிசம்பர் மாததிற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தற்பொழுது நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதை திறக்கப்பட்ட பின்னர் கண்டியிலிருந்து கொழும்பிற்கு 1 மணித்தியாலத்திற்குள் பயணிக்க கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ருவான்புர அதிவேக நெடுஞ்சாலையில் குருநாகல் ,தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தற்பொழுது கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் 100 கிலோமீற்றர் பாதை காப்பட் இடப்பட்ட சீர்செய்யப்பட்டு வருகின்றது.

கண்டி மாவட்டத்தில் 300 விகாரைகளுக்கான பாதைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

Navy apprehends 4 persons with Kerala cannabis in Southern seas [VIDEO]

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க இந்தியாவின் உதவி – கல்வி இராஜாங்க அமைச்சர்

Date set to consider revision against granting bail to Pujith & Hemasiri