சூடான செய்திகள் 1

கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு பூட்டு

(UTV|COLOMBO)  இன்று(17) முதல் கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் டெங்கு நோய்க்கு உள்ளாகியமை காரணமாக மூடப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன்படி குறித்த மருத்துவமனையில் 15 பேருக்கு டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளதால் குறித்த தீர்மானம் மருத்துவமனை செயற்குழுவினால் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மருத்துவமனையில் நடைபெறவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைகளுக்கு தினம் குறிக்கப்பட்ட நோயாளர்களை களுபோவில மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

 

 

 

Related posts

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

புகையிரத சேவைகள் வழமைக்கு