உள்நாடு

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டுப்பாடு – பொலிஸார் விசேட அறிவிப்பு

கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தல் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம ரஜமகா விகாரையில் இடம்பெற்று வரும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி ஆசீர்வாத வருடாந்த மஹா பெரஹெர ஊர்வலம் செல்லவுள்ளதால் குறித்த வீதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – அவிசாவளை மார்க்கத்தில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் சாரதிகள், ரணால மக்கட சந்தியில் கெகுலங்வல வீதி ஊடாக பனாகொட 293 வீதியின் பனாகொட சந்தி வழியாக கொடகம சென்று, அங்கிருந்து ஹைலெவல் வீதி ஊடாக அவிசாவளை நோக்கி பயணிக்கலாம்.

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹைலெவல் வீதியைப் பயன்படுத்தலாம்.
293 பனாகொட, ஹோமாக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் கெகுலங்வல வீதியின் மங்கட சந்தியில் அவிசாவளை – கொழும்பு (Low Level) பழைய வீதிக்கு பிரவேசிக்கலாம்.

Related posts

க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

editor

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை