கிசு கிசு

கொழும்பு அண்டிய பகுதிகளில் சூடாகும் கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி புத்தக கண்காட்சிக்கும், கொழும்பு பேரூந்து நிலையத்திற்கும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிப்பதால், அவ்வலையத்திலுள்ள மூன்று தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக உள்நாட்டு பத்திரிகையான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் மற்றும் 9 ஆம் வார்டுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலாபம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனியார் வகுப்புகளுக்கும் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

Related posts

காதலியின் வெற்று மார்பகத்தில், நேரலையில் முத்தமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்

அலி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம் : ஞானசார எச்சரிக்கை [VIDEO]

தலையாட்டி பொம்மைகளாக இருந்தது போதும் – தலைமை கோரும் ஹகீம்