சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO) நாளை மறுதினம் காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் ஹோகந்தர பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதுடன், கொழும்பில் மேலும் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாகநகர சபைகளின் அதிகார பகுதிகள், மஹரகமை, பொரலஸ்கமுவ நகர சபையின் அதிகார பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபையின் அதிகார பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து 103 ரூபாவால் விற்பனை

இந்தியாவிற்கு விஜயம் கேர்கொள்ளும் பிரதமர்

பயண பொதி ஒன்றில் இருந்த கைகுண்டே வெடிப்பு ஏற்பட காரணம்