உள்நாடு

கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) –  அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக , கொழும்பு 01, 03, 09, 14 மற்றும் கடுவெல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பு 02, கொழும்பு 07, கொழும்பு 08 மற்றும் 10 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

மின்கட்டணத்திற்கு சலுகை..?

தங்கம் மற்றும் நாணய விலை குறித்த தகவல்