உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

(UTV | கொழும்பு) –   தொழில் ரீதியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போன்று நடித்து சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் உஸ்வெடகெய்யாவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 5

5 வயதான சந்தேக நபர் கொழும்பு ஆமர் வீதியை வதிவிடமாகக் கொண்டவராவார். தொழில் ரீதியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியர் என கூறிக்கொண்டு சட்ட விரோத மருத்துவ நிலையமொன்றை நடத்திய சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சான்றிதழை பெறுவதற்காக பொலிஸ் முகவர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!

நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்று

ஓமந்தையில் நிலக்கீழ் வெடிகுண்டுகள் மீட்பு