உள்நாடு

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகரில் சேவையாற்றும் சீன பிரஜைகள் 1000 பேருக்கும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் இன்றுடன் கொழும்பு நகரில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (06) இரண்டாவது நாளாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்று 1,083 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தினூகா குருகே தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று 496 பேர் சிக்கினர்

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

ஐந்து மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை