உள்நாடு

கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) –  ரயில்வே இயந்திர சாரதிகளும், ரயில்வே கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தில், ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்

மாகாண சபை தேர்தல் : மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம் 14 இதற்குப் பிறகு