வகைப்படுத்தப்படாத

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இடைக்கால தடை உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – கொழும்பில் இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாலபே மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரிக்கை விடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இரண்டு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருவாத் தோட்ட காவல்துறையினரால், கொழும்பு பிரதான நீதவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைக் கவனத்திலெடுத்த நீதவான், கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் வாகனப்பாவனை நிறுத்தம்

Three suspects arrested for stealing iron from Hambantota Harbour

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்