உள்நாடு

கொழும்பில் spa க்களை சுற்றி வளைத்து அதிரடி வேட்டையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

(UTV | கொழும்பு) –  கொழும்பில் spa க்களை சுற்றி வளைத்து அதிரடி வேட்டையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

(visiters visa )சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கொழும்பில் உள்ள பிரபல மசாஜ் நிலையங்களில் பணிபுரிந்த 15 தாய்லாந்து இளம் பெண்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் விசேட புலனாய்வு பிரிவின் தலைவர் விபுல் காரியவசம் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு, ஹெவ்லொக் வீதியில் அமைந்துள்ள முன்னணி மசாஜ் நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 10 தாய்லாந்து பெண்களை கைது செய்துள்ளனர் .
மேலும், எஞ்சிய ஐவரும் மவுண்ட்லெவனியா மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வரின் விசா காலாவதியாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேட்பாளர்களுடன் இணைந்து நிவாரண செயற்பாடுகளில் ஈடுபட அரச நிறுவனங்களுக்கு தடை

யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

இலங்கையின் 17 வது பிரதமர் மூன்றாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

editor