உள்நாடு

கொழும்பில் IPHONE மோசடி

(UTV | கொழும்பு) –  கொழும்பில் IPHONE மோசடி

கொழும்பில், குறைந்த விலையில் ஐபோன்களை IPHONE  வழங்குவதாக கூறி 500 பேரிடம் இருந்து 50 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொழும்பு 15, மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் புகார்களில்,
சந்தேகநபர் 7.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மொபைல் போன்கள் தருவதாக உறுதியளித்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருப்பதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

ஜனாதிபதி ஆஸ்திரேலியா பயணமானார்