உள்நாடு

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் நாளை (20) இரவு 11 மணி முதல் மறுநாள் (21) காலை 9 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அக்காலப்பகுதியில் கொழும்பு 04 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றில் பாலியல் வன்கொடுமை: குற்றப்பத்திரிகை தயார்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்