உள்நாடு

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

(UTV | கொழும்பு) – கொழும்பிலுள்ள வீதிகளில் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் தானாக இயங்கச் செய்வதற்கான செயன்முறை இயங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாணந்துறை – வில்லியம் சந்தி வரையிலான பாணந்துறை மொரட்டுவ, கட்டுபெத்த மற்றும் அங்குலான சந்தி என்பவற்றிலும் பொருப்பன சந்தி பெலெக்கடே சந்தி, மெலிபன் சந்தி, டெம்ப்லஸ் வீதி, தெஹிவளை மேம்பாலம், வில்லியம் சந்தி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் இயங்கவுள்ளன.

கொழும்பு – ஹொரணை வீதியின் பல இடங்களிலும் கொட்டாவ – பத்தரமுல்லை வீதியிலுள்ள சமிக்ஞைகளும் இவ்வாறு நவீனமயப்படுத்தப்பட்டு இயங்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

Related posts

அரச நிறுவனங்களது புதிய கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ஞானசார தேரருக்கு பிடியாணை

முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு