உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் இன்று(18) நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று(18) காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு 13,14 மற்றும் 15 அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று(18) பிற்பகல் 2 மணி தொடக்கம் ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

விமான நிலையம் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும்- அமைச்சர் நிமல்