வகைப்படுத்தப்படாத

கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – நாவாலி – அட்டகரி பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் ஆவா குழுவினை சேர்ந்த சிலர் கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவம் தொடபில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ள 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் கொள்ளையிற்கு பயன்படுத்திய உந்துருளிகளும் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் தாம் ஆவா குழுவினை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளதுடன, முகத்தினை மறைத்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வர்த்தக நிலையத்தில் இருந்த பொருட்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபா பணத் தொகையினை கொள்ளையடித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Bill and Ted Face the Music” filming kick off

ලසිත් මාලිංගගේ එක්දින තරඟ දිවියේ අවසාන එක් දින තරගය අද

ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை