விளையாட்டு

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் பிரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் மனிஸ் பாண்டோ ஆட்டமிழக்காமல் 69 ஓட்டஙக்களை பெற்று கொடுத்தார்.

மேலும் யூசுப் பதான் 59 ஓட்டங்களையும் பெற்று கொண்டார்.

Related posts

முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

இந்திய கிரிக்கட் வீரர்களின் வேதனம் உயர்வு!!