உள்நாடு

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை.

அநுராதபுரம் கல்னெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு (12) நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்னெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காணரமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரது சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்