கிசு கிசு

கொரோனாவை சமாளிக்க சைவமாகும் நாடுகள்

(UTV |  சீனா) – உலக அளவில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே ஒழிய குறைந்தபாடில்லை.

அவ்வாறு இருக்க, கொரோனா வைரஸின் தாயகமாக சித்தரிக்கப்படும் சீனாவில், தற்போது உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தாவரங்கள் அடிப்படையிலான இறைச்சி உணவுகளுக்கு சீனாவில் மவுசு அதிகரித்துள்ளதாம்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியோண்ட் மீட் இன்க் (Pure Meat Ink) என்ற நிறுவனம், சீனா முழுவதும் தாவரங்களை அடிப்படையாக கொண்ட இறைச்சி உணவுகளை விற்பனை செய்ய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது.

அதே போல், பெய்ஜிங்கைச் சேர்ந் ஜென் மீட் நிறுவனம், சோதனை முறையில் சைவ மீட்பால்ஸ் விற்பனையை தொடங்கி உள்ளது.

அசைவ இறைச்சி பொருட்களுக்கு நிகரான சுவை, சைவ இறைச்சியில் கிடைப்பதால் பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையிலும் அசைவத்தினை தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவை கொரோனாவுக்காக அல்ல என்பதோடு காலத்திற்கு காலம் அரசியல் மாற்றத்துடன் மாறுபடும் வெறும் அரசியல்வாதிகளால் குறிப்பிட்ட சில மக்களை மகிழ்வூட்டும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.

இவ்வாறு இருக்க, கொரோனா இனை மேற்கோள்காட்டி அநேகமான நாடுகள் அசைவத்தினை ஒதுக்கி சைவத்தினை விரும்பும் நிலை ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவும் இதனை கடைபிடிக்க முயல்வதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலர் தினத்தையொட்டி ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பொலிஸ் ‘ரோபோ’