கேளிக்கை

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த விஷால்

(UTV|இந்தியா)- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் அதிலிருந்து விரைவாக குணமடைந்தது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எப்படி குணமடைந்து வந்தார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஷால்.

சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை தான். தமக்கும் அதிக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது.

மூவரும் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொண்டதால், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம். மேலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர இயக்குநர் முடிவு?

பாயல் கோஷ்க்கு வந்த சோதனை

‘ஈஸ்வரன்’ ஆன்லைனில் வெளியானது