உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,882 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 213 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது