உள்நாடு

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவியுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் வைத்து பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுமாயின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை வழங்க வேண்டாம் என அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய அரசுக்கு ஆதரவு வழங்குமாறு ‘வியத்மக ‘ அமைப்பிடம் கோரிக்கை

திருமணப்பதிவுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசில் குளிர்காய்கிறது